சாய்ந்தமருதில் இலஞ்சம் பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் கைது
சாய்ந்தமருதில் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது இன்று(17) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அண்மையில் கைதான போதைப்பொருள் சந்தேகநபர் ஒருவரை சட்ட நடவடிக்கைகளில் இருந்து விடுவிப்பதற்கு உதவ நடவடிக்கை எடுப்பதாகக் கூறி 20 ஆயிரம் ரூபாவை இலஞ்சமாகப் பெற்றதாக கூறப்படுகின்றது.
மேலதிக விசாரணை
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் தர உத்தியோகத்தர் ஒருவரும், சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி தற்போது பெரிய நீலாவணை பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரியாக செயற்பட்டு வரும் பொலிஸ் பரிசோதகர் ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 4 மணி நேரம் முன்
இலங்கையில் முதன்முறையாக பதிவாகியுள்ள சம்பவம்! பிரபல தனியார் வங்கிகளின் முகாமையாளர்கள் அதிரடியாக கைது
காளி கோயிலை இடித்த ஹிஸ்புல்லா! சஹ்ரானை சந்தித்து ஒரு மாதத்தில் குண்டு வெடிப்பு - குற்றச்சாட்டுகளை அடுக்கும் ஈரோஸ் அமைப்பு