மீண்டும் 500 ரூபாயை தாண்டியுள்ள சூப்பர் டீசல் விலை! விலை அதிகரிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு
உலக சந்தை விலைகளுடன் ஒப்பிடுகையில், நாட்டின் ஒட்டோ டீசல் 66 ரூபாய் நஷ்டத்தில் விற்கப்படுவதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருண தெரிவித்துள்ளார்.
30 ஆம் திகதி நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்த எரிபொருள் விலை திருத்தம் குறித்து நேற்று (01) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் விளக்கமளிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
எரிபொருள் விலை அதிகரிப்பு
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், ஒரு லீற்றர் பெட்ரோலுக்கு ரூ. 52 நஷ்டமும், ஒரு லீட்டர் சூப்பர் டீசலுக்கு ரூ. 53 நஷ்டமும் நிறுவனத்திற்கு இன்னும் ஏற்பட்டு வருவதாக தலைவர் தெரிவித்துள்ளார்.

நேற்று முன் தினம் நள்ளிரவு முதல் ஒரு லீற்றர் ஆக்டேன் 92 பெட்ரோல் விலையை ரூ. 15ம், ஒரு லீட்டர் ஒட்டோ டீசல் விலையை ரூ. 10ம், ஒரு லீட்டர் சூப்பர் டீசல் விலையை ரூ. 50ம் பெட்ரோலிய கூட்டுத்தாபனம் உயர்த்தியுள்ளது.
இந்த எரிபொருள் விலை திருத்தத்தின் போது சிபெட்கோ நிறுவனமும் சூப்பர் டீசலின் விலையை உயர்த்தியுள்ளது.
மூன்றரை வருடங்களுக்கு பின்னர் விலை மாற்றம்
2022 ஆம் ஆண்டு 520 ஆக பதிவாகியிருந்த நிலையில், 2026 ஆம் ஆண்டு பதிவான விலை திருத்தத்தின்படி, சூப்பர் டீசலின் விலை ரூ. 528 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.

உத்தியோகபூர்வ எரிபொருள் விலைத் தரவுகளின்படி, 2023ஆம் ஆண்டு மார்ச் 02ஆம் திகதி சூப்பர் டீசல் ஒரு லீற்றர் 520 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
இதன்படி, சுமார் மூன்றரை ஆண்டுகளுக்குப் பின்னர் சூப்பர் டீசல் ஒரு லீற்றரின் விலை மீண்டும் 500 ரூபாயை தாண்டியுள்ளது.
பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் விலை திருத்தத்திற்கு இணையாக, லங்கா ஐஓசி நிறுவனமும் தனது எரிபொருள் விலைகளை திருத்தியுள்ளது.
இதேவேளை, தற்போதைய அரசாங்கம் பதவியேற்ற பின்னர், சூப்பர் டீசல் விலை 500 ரூபாயை தாண்டியுள்ள முதல் சந்தர்ப்பம் இதுவென்றும் கூறப்படுகின்றது.
கெஹல்பத்தர பத்மேவினால் எழுதப்பட்ட இரகசிய குறிப்பேடுகள் மீட்பு - அம்பலமாகவுள்ள முக்கிய புள்ளிகளின் பெயர்கள்