ஐரோப்பா செல்ல முற்பட்ட இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் போலந்து செல்ல முயன்ற இருவர் செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தின் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போலி போலந்து விசாக்களுடன் கடவுச்சீட்டுகளை பயன்படுத்தி கட்டார் வழியாக போலந்துக்கு செல்ல முயன்றமை தொடர்பில் அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
போலி விசா
சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 31 மற்றும் 38 வயதுடைய தெமோதர மற்றும் பெலிகல பகுதிகளில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

பிறப்பிலேயே சக்திவாய்ந்த மற்றும் கவர்ச்சிகரமான ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
