திருகோணமலையில் மின்சார வேலியில் சிக்குண்டு இருவர் பலி
திருகோணமலை -ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவில் உள்ள சூரநகர் பகுதியில் யானை பாதுகாப்பு மின்சார வேலியில் சிக்குண்டு இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவமானது நேற்று(1) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் சூரநகர் பகுதியைச் சேர்ந்த மஹேஸ்வரன் ரவிச்சந்திரன் (வயது 47) ,துரைநாயகம் சசிகரன் (வயது 29) என்பவர்களாவர்.
மேலதிக விசாரணை
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், வயலுக்கு போடப்பட்ட யானை பாதுகாப்பு மின்சார வேலியை சரி செய்து கொண்டிருந்தபோது சசிகரனுக்கு மின்சாரம் தாக்கியுள்ளது.
இதன் பின்னர் மின்சாரம் தாக்கி கீழே விழுந்து கிடந்தவரை ரவிச்சந்திரன் காப்பாற்ற முற்பட்டபோதே அவரும் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த இருவரும் மாமன் மருமகன் முறையுடையவர்கள் என தெரியவருகிறது.
மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 3 நாட்கள் முன்

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் வாக்குவாதம்.. பாடகர் மனோவிடம் சசிகுமார் சொன்ன அந்த வார்த்தை Cineulagam
