இந்திய-சீன கம்யூனிஸ்ட்டுக்களுடன் உறவை வலுப்படுத்தும் இலங்கை அரசாங்கம்
இலங்கை நாட்டில் செல்வாக்கு செலுத்த போட்டியிடும் இரண்டு பிராந்திய சக்திகளான சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில்; உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்தவுள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
பாகிஸ்தானின் செய்தித்தாள் ஒன்று இதனை தெரிவித்துள்ளது.
இதன்படி, சீனா - இலங்கை உறவுகளை இன்னும் வலுப்படுத்தப்படுத்தவுள்ளதாக சீன அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
ஜேவிபியின் மே தினக் கூட்டம்
அதேநேரம் சீனாவுடனான ஒத்துழைப்பு கிராமப்புற வறுமையை நிவர்த்தி செய்ய உதவும் என்று ஜேவிபி பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா கூறியுள்ளார்.
இந்தியாவின் தென் பகுதியின் கேரள மாநிலத்தை ஆளும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் ஏ.ஆர். சிந்து, ஜேவிபியின் விரைவான ஆட்சி எழுச்சியிலிருந்து இந்தியா உத்வேகம் பெறுவதாகக் கூறியுள்ளார்.
கேரளா இலங்கையின் வழியைப் பின்பற்றுவது மட்டுமல்ல -- முழு இந்தியாவும் இலங்கை வழியைப் பின்பற்றும் என்று சிந்து கூறியுள்ளார்.
நேற்று இடம்பெற்ற ஜேவிபியின் மே தினக் கூட்டத்தின்போது, இந்த கருத்துக்களை சீனா ,இந்திய கம்யூனிஸ்ட் பிரதிநிதிகளும், ஜேவிபியின் செயலாளர் ரில்வின் சில்வாவும் தெரிவித்துள்ளனர்.
கடைசி நாடாளுமன்றத்தில் வெறும் மூன்று ஆசனங்களை மட்டுமே பெற்றிருந்த ஜே.வி.பி 2025 நவம்பர் தேர்தலில் 225 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்றத்தில் 159 ஆசனங்களை வெற்றிகொண்டு, மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





நிதிஷை, சுதாகர் எப்படி கொலை செய்தார், இனியா சிக்கியது எப்படி... பாக்கியலட்சுமி சீரியல் பரபரப்பு எபிசோட் Cineulagam

சக்திவாய்ந்த பிரம்மோஸ் ஏவுகணைகள் இந்தியாவில் தயாரிக்கப்படும்: வெளியான முக்கிய அறிவிப்பு News Lankasri

சகோதரி மகள்களைக் காப்பாற்ற அருவிக்குள் குதித்த இலங்கைத் தமிழருக்கு நேர்ந்த துயரம்: சமீபத்திய தகவல் News Lankasri

ஒரே நேரத்தில் ரூ.5000 கோடியை தோளில் சுமக்கும் ஹீரோ.. இப்போது இந்தியாவில் நம்பர் 1 இவர்தானா Cineulagam
