விமான போர்டிங் பாஸ்களை மாற்றிக்கொண்ட இலங்கையர் உட்பட இருவர் கைது!
விமானத்தில் பயணிப்பதற்கான தங்களுடைய போர்டிங் பாஸ்களை ( Boarding pass) மாற்றிக் கொண்டதாகக் கூறப்படும் இலங்கையர் உட்பட இருவரை மும்பை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்றைய தினம் (15.04.2023) சத்ரபதி சிவாஜி மகராஜ் சர்வதேச விமான நிலையத்தில் (Chhatrapati Shivaji Maharaj International Airport) நடந்துள்ளது.
குற்றம்
இலங்கை மற்றும் ஜேர்மனியர்கள் முறையே லண்டன் மற்றும் காத்மாண்டு செல்வதற்காக விமான நிலையத்தில் தங்களுடைய போர்டிங் பாஸ்களை பரிமாறிக்கொண்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
போலி கடவுச்சீட்டில் பயணித்த 22 வயதான இலங்கையர் மற்றும் 36 வயதான ஜேர்மன்
பிரஜை ஆகியோர் விமான நிலையத்தில் உள்ள கழிவறையில் தங்களுடைய போர்டிங் பாஸ்களை
மாற்றிக் கொண்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.