ஹோர்முஸ் நீரிணையில் இரண்டு எண்ணெய்க்கப்பல்கள் தீப்பற்றி எரிவு
ஹோர்முஸ் நீரிணை பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கண்ணிவெடிகளில் மோதியதால் இரு எண்ணெய்க்கப்பல்கள் தீப்பற்றி எரிந்துள்ளதாக ஈரானின் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை தகவல்களின்படி, கடல்சார் சர்வதேச போக்குவரத்து விதிகளை மீறி, கண்காணிப்பு அமைப்புகளை முடக்கிச் சென்ற கப்பல்களே தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன.
இந்த நிலையில், அமெரிக்காவின் தலையீடுகள் மற்றும் அச்சுறுத்தல்கள் தொடருமானால், அந்த பகுதியில் இயங்கும் எண்ணெய் நிறுவனங்கள் பெரும் விலையைக் கொடுக்க வேண்டிவரும் என ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை எச்சரித்துள்ளது.
பேச்சுவார்த்தை
இதேவேளை, பிராந்தியத்தில் போர் பதற்றமும் மோதல்களும் அதிகரித்து வரும் நிலையிலும், ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான தூதரகப் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக கட்டார் வெளியுறவு அமைச்சகத்தின் பேச்சாளர் மாஜித் அல்-அன்சாரி தெரிவித்துள்ளார்.

டோஹாவில் நடைபெற்ற உலகப் பாதுகாப்பு உச்சிமாநாட்டில் பேசிய அவர், இருதரப்பும் கருத்துக்களையும் முன்மொழிவுகளையும் பரிமாறிக் கொண்டு தீவிரமாக ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருவதாகவும், அமைதியான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஈழப் போராட்டத்தில் யோதலிங்கம் கிளர்ச்சியின் குறியீடு 20 நிமிடங்கள் முன்
450-க்கும் மேற்பட்ட பிரித்தானியர்கள் திரும்பவே இல்லை: அமெரிக்க செயலருக்கு பிரித்தானியா கண்டனம் News Lankasri
பிரான்சில் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு: பாரிஸின் முக்கிய வீதிகளுக்கு விதிக்கப்பட்ட தடை News Lankasri