அல்பர்ட்டா மாகாண வாக்கெடுப்பு : கனடாவுடன் தொடரும் முடிவு
அல்பர்ட்டா மாகாண மக்கள் கனடாவுடன் தொடர்ந்து நீடிப்பதற்கான தெளிவான முடிவை எடுத்துள்ளதாக கனடியப் பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.
அல்பர்ட்டா மாகாணம் கனடாவிலிருந்து பிரிந்து தனி நாடாவதா அல்லது கனடாவுடனேயே நீடிப்பதா என்பது குறித்த வாக்கெடுப்பில், ஆரம்பக்கட்டத் தரவுகளின்படி மூன்றில் மூன்று பங்கு (சுமார் 75%) வாக்காளர்கள் கனடாவுடன் தொடர்வதற்கே ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
அல்பர்ட்டா மக்கள் கனடாவைத் தேர்ந்தெடுத்துள்ளனர்" என்று பிரதமர் மார்க் கார்னி தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில் உறுதியாகக் குறிப்பிட்டுள்ளார்.
பெரும் வெற்றி
கனடாவுடன் நீடிக்கும் தரப்பிற்கு இது பெரும் வெற்றியாக அமைந்தாலும், பிரிவினைவாதிகள் இதனைத் தங்களுக்குக் கிடைத்த வெற்றியாகவே கருதுகின்றனர்.

"எங்களது இயக்கம் இதோடு நின்றுவிடாது" என பிரிவினைவாதத் தலைவர் ஜெப்ரி ராத் தெரிவித்துள்ளார்.
ஈழப் போராட்டத்தில் யோதலிங்கம் கிளர்ச்சியின் குறியீடு 1 மணி நேரம் முன்
பிரான்சில் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு: பாரிஸின் முக்கிய வீதிகளுக்கு விதிக்கப்பட்ட தடை News Lankasri