கொட்டகலையில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்து! இருவர் காயம்
கொட்டகலையில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளனாதில் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்தானது நேற்றையதினம்(7) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தலவாக்கலையில் இருந்து ஹட்டன் நோக்கியும், ஹட்டனில் இருந்து கொட்டகலை நோக்கியும் பயணித்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் கொட்டகலை நகர மைய பகுதியில் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விசாரணை
ஹட்டனில் இருந்து கொட்டகலை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள், அதே திசையில் பயணித்த முச்சக்கர வண்டியை முந்திச் செல்ல முயன்றபோது, எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள்களும் பலத்த சேதமடைந்துள்ளன.
விபத்து குறித்து திம்புள்ள பத்தனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




