இலங்கையில் சட்டவிரோதமாக எரிபொருள் வைத்திருந்தால் சிறைத்தண்டனை : நீதிமன்றம் விதித்துள்ள உத்தரவு
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில், சட்டவிரோதமாக அதனை பதுக்கி வைத்துள்ளவர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படும் என நீதிமன்ற தீர்ப்பின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக 65 லீட்டர் பெட்ரோலை வைத்திருந்த மற்றும் லொறியில் எரிபொருளைக் கொண்டு சென்ற ஒரு நபருக்கு, கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றம் இரண்டு மாத சிறைத்தண்டனையும் 2500 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் நெருக்கடி
கல்கிஸ்ஸ பகுதியை சேர்ந்த நபருக்கு நீதவான் பாசன் அமரசேன இந்த தண்டனையை விதித்துள்ளார்.
வெல்லவத்தை பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் இருந்து எரிபொருள் கேன்களில் வழங்கப்படுவதாக வெல்லவத்தை பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற வெல்லவத்தை பொலிஸார், குறித்த நபரை கைது செய்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.
கைது செய்யப்படும் போது லொறியில் சுமார் 20,000 ரூபாய் மதிப்புள்ள நான்கு கேன் பெட்ரோல் இருப்பதையும் பொலிஸார் கண்டுபிடித்தனர்.