கந்தளாய் பகுதியில் போதைப்பொருளுடன் இருவர் கைது: பொலிஸார் விசாரணை
கந்தளாயில் - அக்போபுர பகுதியில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது, 10 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (29.08.2026) மாலை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
போதைப்பொருள் கைப்பற்றல்
கந்தளாயிலிருந்து கபரணைக்கு கொண்டு செல்லத்தயாராக இருந்த நிலையில் சுமார் 60 கிராம் அளவிலான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் சீனிபுர பகுதியைச் சேர்ந்த 33 வயதுடையவர் எனவும், மற்றையவர் கபரண திகம்பத்த பகுதியைச் சேர்ந்த 33 வயதுடையவர் எனவும் அக்போபுர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சந்தேகநபர்களிடமிருந்து மோட்டார் சைக்கிள் ஒன்றும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட இருவரும் இன்று (30) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்போபுர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
தமிழர் பகுதியில் தீச்சட்டி ஏந்தி போராட்டத்தில் குதித்த மக்கள் - அடையாளம் தெரியாத நபரால் ஏற்பட்ட குழப்பம்