பிரான்ஸில் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ள 2 லட்சம் சிறுவர்கள்! வெளியான அறிக்கை
பிரான்ஸில் 70 ஆண்டுகளில் பாதிரியார்களால் 2 லட்சம் சிறுவர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளதாக விசாரணை அறிக்கையொன்றில் அதிர்ச்சி தகவலொன்று வெளியாகியுள்ளது.
உலகெங்கிலும் உள்ள கத்தோலிக்க தேவாலய பாதிரியார்கள் பலர் சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கடந்த 2018ஆம் ஆண்டு பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. பல நாடுகளில் பாதிரியார்களுக்கு எதிராக பாலியல் வழக்குகளும் தொடரப்பட்டன.
இதை தொடர்ந்து பிரான்ஸில் உள்ள கத்தோலிக்க தேவாலயம் பாதிரியார்கள் மற்றும் தேவாலய ஊழியர்களால் நடந்த பாலியல் துன்புறுத்தல் குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணை குழு ஒன்றை அமைத்தது.
அந்த குழு 2½ ஆண்டுகளுக்கும் மேலாக தீவிர விசாரணை நடத்தி 2,500-க்கும் மேற்பட்ட பக்கங்களை கொண்ட முழு அறிக்கையை தற்போது தாக்கல் செய்துள்ளது.
இது தொடர்பான மேலும் பல உலக செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இப்படிக்கு உலகம் தொகுப்பு,
