சந்தைக்கு சென்ற முதியவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் சந்தைக்கு மீன் வாங்க சென்ற முதியவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
ஆனைக்கோட்டை - ஆறுகால்மடம் பகுதியைச் சேர்ந்த செல்லத்தம்பி ரவீந்திரன் (வயது 72) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
திடீர் மரண விசாரணை அதிகாரி
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த முதியவர் நேற்று(25) காலை மீன் வாங்குவதற்காக காக்கைதீவு சந்தைக்கு சென்றிருந்தார்.
இந்நிலையில் சந்தையில் மயங்கி கீழே விழுந்துள்ளார். பின்னர் சிகிச்சைக்காக அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தப்பிக்கும் போது குணசேகரனிடம் வசமாக சிக்கிய சக்தி, தர்ஷன், பின் நடந்த பரபரப்பு சம்பவம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

குக் வித் கோமாளி டைட்டில் ஜெயித்தது இவர்தான்.. மொத்த ஷோவும் ஸ்கிரிப்ட் தானா? ராஜூ விளக்கம் Cineulagam

மறைந்த ரோபோ ஷங்கர் குடும்பம் பட்ட கஷ்டம்.. மாதம் இவ்வளவு லட்சம் EMI கட்டவேண்டுமா? வெளிவந்த உண்மை Cineulagam
