வேலைக்கு சென்ற இளைஞன் பரிதாபமாக மரணம்
இரத்தினபுரி, உருபொக்க - எம்பிலிபிட்டிய பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பனமுர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
25 வயதுடைய வெலேகே அஞ்சன சதுரங்க என்ற இளைஞன் விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
நேற்று முன்தினம் பிற்பகல் 2.00 மணி முதல் 3.00 மணி வரையான காலப்பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இளைஞன் மரணம்
உயிரிழந்த இளைஞர் வேலைக்குச் செல்வதற்காக தனது வீட்டிலிருந்து புறப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

தனது மோட்டார் சைக்கிளின் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் வீதியை விட்டு விலகி மின் கம்பத்தில் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸார் விசாரணை
விபத்தில் பலத்த காயமடைந்த இளைஞர், அப்பகுதி மக்களால் எம்பிலிபிட்டிய பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

உயிரிழந்த இளைஞர் எம்பிலிபிட்டிய பனமுற பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிவதாக தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
ரஜினி, கமல் படத்திலிருந்து சுந்தர் சி திடீர் விலகல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. என்ன ஆச்சு Cineulagam
பாகிஸ்தானில் இருந்து பாதியில் நாடு திரும்பும் 8 இலங்கை கிரிக்கெட் வீரர்கள்: ஒருநாள் தொடர் ரத்து? News Lankasri