இரண்டு உயர் பொலிஸ் அதிகாரிகள் குறித்து விசாரணை
இரண்டு உயர் பொலிஸ் அதிகாரிகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பொலிஸ் திணைக்களத்தின் உயர் பதவிகளை வகித்து வரும் இரண்டு அதிகாரிகள் தொடர்பில் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த பொலிஸ் அதிகாரிகளின் சொத்துக்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சட்டவிரோத சொத்து குவிப்பு
பிரதிக் பொலிஸ் மா அதிபர் மற்றும் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆகிய பதவிகளை வகித்து வரும் இருவர் தொடர்பில் கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சட்டவிரோத சொத்து குவிப்பு தொடர்பிலான பொலிஸ் பிரிவினால் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கடந்த காலங்களில் இந்த அதிகாரிகள் இருவரும் பெருந்தொகை சொத்துக்களை சேர்த்துள்ளதாக முறைப்பாடுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.





23 வயதில் ரூ. 250 கோடி சொத்துக்கு சொந்தக்காரியாக இருக்கும் பிரபல சீரியல் நடிகை!! யார் தெரியுமா? Cineulagam

ட்ரம்பால் 25 பில்லியன் டொலர் வருவாயை இழக்கும் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ள ஆசிய நாடொன்று News Lankasri
