கடலுக்கு சென்ற 2 மீனவர்கள் கரை திரும்பவில்லை: தேடுதல் பணி தீவிரம்
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு வத்திராயனிலிருந்து நேற்று பிற்பகல் கடலுக்குச் சென்ற இரண்டு மீனவர்கள் இன்னும் கரை திரும்பாததால் அப்பகுதி மக்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
இவர்களோடு பலர் நேற்று பிற்பகல் கடலுக்குச் சென்று திரும்பியிருந்த போதிலும்
இருவர் மட்டும் இன்று காலை கரை திரும்பாததால் பிரதேசத்திலுள்ள மீன்பிடி
படகுகள் மூலம் மீனவர்கள் தேடுதல் நடத்தியிருந்தனர்.
இதன்போது அவர்கள் பயன்படுத்திய வலை வெட்டப்பட்டு துண்டங்களாகக் காணப்படுகின்ற போதும் அவர்கள் சென்ற படகு இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை எனப் பிரதேச மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு காணாமல் போனவர்கள் பாரிய படகுகளுடன் மோதுண்டு கடலில் மூழ்கடிக்கப் பட்டிருக்கலாமென பிரதேச மீனவர்கள் அஞ்சுகின்றது.
யோசேப் பிரேம்குமார், அருண்குமார் தணிகைமாறன், என்ற இரண்டு மீனவர்களுமே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.
இவர்களை இன்று பல படகுகளில் சென்று தேடுதல் நடாத்தியும் இதுவரை கண்டுபடிக்கப்
படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படம் ஓடவில்லை என்றால் கண்டிப்பாக நான் மொட்டை அடித்துக்கொள்கிறேன்... நடிகை பரபரப்பு பேச்சு... Cineulagam
148 தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளோம் - நேபாளத்திலிருந்து வீடியோ வெளியிட்ட தேச மங்கையற்கரசி News Lankasri