தம்பிலுவில் மயானத்தை அண்டிய பகுதிகளில் மீண்டும் 2 ஆம் கட்ட அகழ்வு பணிகள் முன்னெடுப்பு
அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பிலுவில் மயானத்தை அண்டிய பகுதிகளில் மீண்டும் 2 ஆம் கட்ட அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கருணா -பிள்ளையான் குழு முக்கியஸ்தர் இனிய பாரதியின் மற்றுமொரு சகாவின் வாக்குமூலத்தின் அடிப்படையில் நேற்று (28) மாலை அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்ற மேலதிக நீதிவான் திருமதி தெசீபா ரஜீபன் முன்னிலையில் ஜேசிபி இயந்திரம் மூலம் அடையாளம் காணப்பட்ட பல இடங்கள் தோண்டப்பட்டு வருகின்றன.
அகழ்வு பணிகள்
கடந்த 2005 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இருந்து கருணா- பிள்ளையான் அணியின் முக்கியஸ்தரான இனிய பாரதியின் முக்கிய சகாவாக செயற்பட்ட அம்பாறை மாவட்டம் காரைதீவு பகுதியை சேர்ந்த சந்தேக நபர் குறித்த பகுதிக்கு கைவிலங்கிடப்பட்டு அழைத்து வரப்பட்டிருந்தார்.
அவர் கடந்த காலங்களில் திருக்கோவில் பகுதியில் தனியார் தொலைத்தாடர்பு சிம் விற்பனை முகவராக செயற்பட்ட அருளானந்தன் சீலன் என்பவரை கடத்தி படுகொலை செய்து குறித்த இடத்தில் புதைத்திருப்பதாக அரச சாட்சியாக மாறி குற்றப்பலனாய்வு பிரிவினரின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தார்.
இதன் போது குறித்த பிரதேசத்தை சுற்றி பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி உட்பட் பயங்கரவாத புலனாய்வு பிரிவு மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பொலிஸார் விசேட அதிரடிப்படையினர் தடயவியல் பொலிஸார் என பலரும் பிரசன்னமாயிருந்தனர்.
வாக்குமூலம்
ஏற்கனவே கடந்த மாதம் ஜுலை (31) அன்று தனியார் தொலைத்தாடர்பு சிம் விற்பனை முகவராக செயற்பட்ட அருளானந்தன் சீலன் என்பவரை கடத்தி படுகொலை செய்து குறித்த பொது மைதானத்தில் புதைத்திருப்பதாக அரச சாட்சியாக மாறி அக்கரைப்பற்று மாவட்ட நீதிவான் நீதிபதி ஏ.சி றிஸ்வான் மேற்பார்வையில் கடந்த 2005 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இருந்து கருணா-பிள்ளையான் அணியின் முக்கியஸ்தரான இனிய பாரதியின் முக்கிய சகாவாக செயற்பட்ட அனோசியஸ் சுரேஸ்கண்ணா எனப்படும் யூட் எனும் சந்தேக நபர் குறித்த பொது மயானத்திற்கு கைவிலங்கிடப்பட்டு அழைத்து வரப்பட்டிருந்தார்.
எனினும் குறித்த நபரது வாக்குமூலத்திற்கமைய திருக்கோவில் பிரதேச சபைக்குட்பட்ட பொது மயானத்தில் தேடுதல் மற்றும் தோண்டப்பட்ட பின்னர் எதுவும் கிடைக்காத காரணத்தினால் குறித்த செயற்பாடுகள் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டன.
பின்னர் மற்றுமொருவரின் வாக்குமூலத்திற்கமைய நேற்று மற்றுமொரு இடமான தம்பிலுவில் மயானத்தை அட்டிய பகுதிகளில் மீண்டும் 2 ஆம் கட்ட அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |










இந்தியா மீது அணுகுண்டு வீச்சு... ட்ரம்பை கொல்ல வேண்டும்: அமெரிக்காவை உலுக்கிய சம்பவத்தில் பகீர் பின்னணி News Lankasri

துளியளவும் பந்தா இல்லாமல் விசேஷத்தை கொண்டாடிய சிவகார்த்திகேயன்.. மகிழ்ச்சியில் குடும்பத்தினர் Manithan

15 நாள் காதலன் வீட்டிலும், 15 நாள் கணவர் வீட்டிலும்.., மனைவியின் விருப்பத்தை நிறைவேற்றிய கணவர் News Lankasri
