சிம் அட்டை, புகையிலை பொதியுடன் இரு விளக்கமறியல் கைதிகள் கைது
கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் சிம் அட்டை மற்றும் புகையிலை அடங்கிய பொதியை வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் இரு கைதிகளைப் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர் என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போதே சிம் அட்டை மற்றும் புகையிலை என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.
ஹட்டன் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய சந்தேக நபரின் சட்டையின் இடது பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் சிம் அட்டை கைப்பற்றப்பட்டுள்ளது.
அத்துடன், கொழும்பு - 05 பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடைய சந்தேக நபரின்
ஆசனவாயிலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 6 புகையிலைத் துண்டுகள் இவ்வாறு
கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று பொலிஸ் விசேட அதிரடிப் படையினர்
தெரிவித்துள்ளனர்.

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

உலகின் கொடூரமான சிறை - ஒவ்வொரு கைதிக்கும் நாளொன்றுக்கு ரூ.85 லட்சம் செலவிடும் அமெரிக்கா News Lankasri

J-35A போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு அதிவேகமாக அனுப்பும் சீனா., பாதி விலைக்கு ஒப்பந்தம் News Lankasri

பேரக்குழந்தைகளுக்கு தோழியாகவே மாறிவிடும் பாட்டிகள் இந்த ராசியினர் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
