இந்தியா எங்கள் நண்பன்: செந்தில் தொண்டமான்
இந்தியா எங்கள் நண்பன், இரண்டு நாடுகள் நட்பு ரீதியாகப் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டிய பிரச்சினை. இதனை அரசியலாக்கக்கூடாது என இலங்கை தொழிலாளர் காங்கிரசின் முக்கியஸ்தரும், பிரதமரின் இணைப்புச் செயலருமான செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
எல்லை தாண்டி மீன் பிடித்தால் சிறையில் அடைக்கப்படுவோம், உடமைகள் அரசுடைமையாக்கப்படும் என்று தெரிந்தும் அவர்கள் இங்கே வந்து மீன்பிடிக்க மாட்டார்கள் என நான் நினைக்கின்றேன். எடுத்த எடுப்பில் சில விடயங்களை நாம் செய்ய முடியாது.
இந்திய மீனவர்களைச் சிறைபிடித்து நீண்டகாலம் வைத்திருக்கவோ முடியாது. இந்தியாவுடன் நாம் நீண்ட காலமாக நட்புறவைப் பேணி வருகின்றோம். இலங்கை அகதிகள் பலருக்கும் தமிழக அரசு அங்கு அடைக்கலம் கொடுத்துள்ளது.
அதேபோன்று சுமார் 50
ஆயிரம் வீடுகளை வடக்கு கிழக்கில் அமைத்துக் கொடுத்துள்ளனர்.
இரண்டு நாடுகள் நட்பு ரீதியாகப் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டிய பிரச்சினை. இதனை
அரசியலாக்கக் கூடாது என தெரிவித்துள்ளார்.