ரிசாட் வீட்டு சீ.சீ.ரீ.வி கமராக்களில் பதிவாகாத ஹிசாலினி தொடர்பான சம்பவம்!
ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணிக்கமர்த்தப்பட்டிருந்த நிலையில் தீக்காயங்களுடன் உயிரிழந்த 16 வயதான சிறுமி ஹிஷாலினியின் மரணம் தொடர்பில் ரிஷாட் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த 16 சீ.சீ.ரீ.வி கெமராக்கள் எவற்றிலும், ஹிஷாலினி தீக்காயங்களுக்கு உள்ளான காட்சிகள் எதுவும் பதிவாகியிருக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் விசேட சிசிரீவி ஆய்வு பிரிவின் அதிகாரிகள் நேற்று குறித்த கெமராக்களை பரிசோதித்துள்ள போதே இந்த விடயம் தெரியவந்துள்ளதாக தகவல்கள் வெளியதகியுள்ளன.
இதன்போது, ரிஷாட் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த 16 சீ.சீ.ரீ.வி கெமராக்களில் இரண்டு கெமராக்கள் செயலிழந்திருந்ததாகவும், அதற்கான காரணம் என்னவென்பது தொடர்பில் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
ஹிஷாலினியின் மரணம் தொடர்பில் இதுவரையில் பொலிஸாரினால் 40க்கும் அதிகமான வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளதுடன், நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மனைவி உள்ளிட்ட 4 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும்,சிறுமி ஹிஷாலினி தங்கியிருந்த அறையின் சுவரில் 'என் சாவுக்கு காரணம்' என எழுதப்பட்டுள்ளமை விசாரணைக் குழுவினரால் இனங்காணப்பட்டுள்ளது.
ஆங்கில எழுத்துக்களில் தமிழ் அர்த்தம் கிடைக்கப் பெறும் வகையில் காணப்படும் இந்த வசனம் சிறுமி ஹிஷாலினியால் எழுத்தப்பட்டதா என்பது தொடர்பில் ஆராய்வதற்காக அவர் உபயோகித்த பாடப்புத்தகங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஹிஷாலினி தங்கியிருந்த அறையை சோதனை செய்தபோது, அங்கிருந்து கைப்பற்றப்பட்டிருந்த புடவைத் துண்டுகள் சிலவற்றையும் அரசின் இரசாயன பகுப்பாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், குறித்த புடவை துண்டுகள் யாருடையவை என்பது தொடர்பில் உறுதியான அறிக்கையைப் பெற்றுக்கொள்ள அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஆதி குணசேகரனுக்கு இரண்டாவது அடி.. பெண்கள் அதிரடி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட் Cineulagam

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri
