இரு வேட்பாளர்களின் வாகனங்கள் பறிமுதல்: சாரதிகள் கைது
வவுனியாவில் (Vavuniya) தேர்தல் விதிமுறைகளை மீறிச் செயற்பட்ட குற்றச்சாட்டில் இரு வேட்பாளர்களின் இரண்டு வாகனங்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நடவடிக்கையானது, இன்று (06) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வேட்பாளரின் உருவப்படம் மற்றும் ஸ்டிக்கர் பொறித்த வாகனங்களில் வேட்பாளர்கள் பயணிக்க முடியும். வேட்பாளரின்றி அவருடைய உருவப்படம் அல்லது ஸ்டிக்கர் பொறித்த வாகனங்கள் பயணிப்பதற்கு தேர்தல் திணைக்களம் தடை விதித்துள்ளது.
ஸ்டிக்கர்கள்
இந்நிலையில், குறித்த விதிமுறையை மீறி வவுனியாவில் வேட்பாளரின்றி வேட்பாளரின் ஸ்டிக்கர்களுடன் நடமாடிய இரு வாகனங்களே வவுனியாப் பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட வேட்பாளர் ப.சத்தியலிங்கம் மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட வேட்பாளர் ஆகியோரது வாகனங்களே மேற்குறிப்பிட்டவாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளின் பின் சாரதிகளை நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஊழல் ஒழிப்பு கோஷத்தை ஊளையிடுதல் ஆக்கிய ரணில்..! 2 மணி நேரம் முன்

30 லட்சம் இழப்பீடு பெற்ற செவிலியர்! பிரித்தானியாவில் கண்ணசைவுகளால் துன்புறுத்திய சக பெண் ஊழியர்! News Lankasri

திருமண பேச்சுக்கு அழைத்து இளைஞரை அடித்துக் கொன்ற காதலி குடும்பம்! POCSO வழக்கில் காதலன் News Lankasri
