இரண்டு சிறுவர்களை காணவில்லை! பொலிஸார் தீவிர விசாரணை
கண்டியில் சிறுவர்கள் இருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கண்டி , தென்னகும்புர பிரதேசத்தைச் சேர்ந்த 13 வயதுடைய இரண்டு சிறுவர்களே காணாமல்போயுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.
காணாமல்போன சிறுவர்களில் ஒருவரது தாயார் இது தொடர்பில் கண்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.
மேலதிக விசாரணை
சிறுவர்கள் இருவரும் நேற்றுமுன்தினம் புதன்கிழமை(8) வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ள நிலையில் மீண்டும் வீடு திரும்பவில்லை என்று முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, சிறுவர்கள் இருவரும் மகாவலி கங்கைக்குச் செல்வதைக் கண்டதாகப் பிரதேச மக்கள், பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கண்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 5 நாட்கள் முன்

திருமணத்தை முடித்த ஜனனிக்கு அடுத்து வந்த ஷாக்கிங் தகவல், என்ன நடக்கும்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
