கனடாவில் வீடொன்றிலிருந்து மீட்கப்பட்ட இரண்டு சடலங்கள்
கனடாவில்(Canada) நியூ பிரவுன் ஸ்வீட் பிராந்தியத்தின் ரொத்சேய் பகுதியில் வீடு ஒன்றிலிருந்து இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன் போது ஆண் ஒருவரினதும் பெண் ஒருவரினதும் சடலங்கள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த இருவரினதும் மரணத்திற்கான காரணங்கள் எதுவும் இதுவரை கண்டறியப்படவில்லை என கூறப்படுகிறது.
பொலிஸ் விசாரணை
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த சம்பவம் காரணமாக பொது மக்களுக்கு எவ்வித பாதிப்பும் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரேதப் பரிசோதனை நிறைவடையும் வரையில் இது தொடர்பில் எவ்வித கருத்துகளையும் வெளியிட முடியாது என மேலும், அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
