புத்தாண்டில் பெற்றோரை பார்க்க சென்ற மகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி
கொஸ்லந்த, வேலன்விட வீடொன்றின் தோட்டத்தில் நேற்று பிற்பகல் வயோதிப தம்பதியினரின் இரண்டு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கொஸ்லந்த பொலிஸார் தெரிவித்தனர்.
வீட்டின் அருகில் உள்ள தோட்டத்தில் வயோதிபப் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
அத்துடன், வீட்டிற்கு மின்சாரம் வழங்கும் மின்சார வயரின் உடைந்த இரண்டு பாகங்களைப் பிடித்துக் கொண்டு உயிரிழந்துள்ளதாகவும், சடலம் மிகவும் அழுகியதாகவும் துர்நாற்றம் வீசுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சடலங்கள் மீட்பு
மற்றைய முதியவரின் சடலம் வீட்டின் நுழைவாயிலுக்கு அருகில் கண்டெடுக்கப்பட்டது.

கொஸ்லந்த வேலன்விட்ட அகர சியாவில் வசித்து வந்த ஆர்.டி.விமலாவதி என்ற 63 வயதுடையவர் மற்றும் உதநிலமேகெதர குணதாச என்ற 70 வயதுடைய ஆகிய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த வீட்டில் வயோதிப தம்பதியினர் மாத்திரமே இருந்ததாகவும், வெல்லவாய பிரதேசத்தில் வசிக்கும் மகள் ஒருவர் புத்தாண்டை முன்னிட்டு நேற்று பெற்றோரை பார்க்க வந்த போது தாய் தந்தையரின் சடலங்களை கண்டெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இரண்டு சடலங்களும் தற்போது அந்த இடத்தில் பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேட்டோ பிரதேசத்திற்குள் அத்துமீறிய ரஷ்யப் பாதுகாப்புப் படையினர்... அதிகரிக்கும் பதற்றம் News Lankasri
நள்ளிரவில் மாயமான பல்கலைக்கழக மாணவர்... நான்கு வாரங்களுக்குப்பிறகு தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் News Lankasri
சரிகமப: தனியாக வந்த சிறுமிக்காக பாடகி சைந்தவி செய்த விடயம்... கண்ணீர் மல்க வைக்கும் காட்சி! Manithan
எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள 'சிறை' திரைப்படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா? Cineulagam