கிழக்கில் அடிப்படைவாத போதனைகள் செய்த 2 பேர் கைது
கிழக்கு மாகாணத்தில் அடிப்படைவாத போதனைகள் செய்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு தனியார் வகுப்புக்களை நடத்தி வந்த இருவரே இவ்வாறு அடிப்படைவாத போதனைகளை செய்துள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
30 மற்றும் 39 வயதான இரண்டு பேரை கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இந்த இரண்டு சந்தேகநபர்களை பயங்கரவாதத் தடைப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
வெளிநாட்டு தீவிரவாத அமைப்புக்களுக்கு ஆட்களை சேர்க்கும் வகையிலான செயற்பாடுகளில் இந்த இரண்டு பேரும் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஒலுவில் பிரதேசத்தில் இவ்வாறு அடிப்படைவாத போதனைகளை இந்த இரண்டு பேரும் மேற்கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
உடல் ரீதியான பயிற்சிகளையும் இந்த இருவரும் மாணவர்களுக்கு வழங்கியுள்ளதாகவும், அவ்வாறு பயிற்சியில் ஈடுபட மறுத்த மாணவர்களை இவர்கள் தாக்கியுள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தாக்குதலுக்கு இலக்கான மாணவர்கள் மருத்துவ பரிசோதைனக்கு உட்படுத்தப்பட உள்ளதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
மரணத்தைக் கண்டேன்..இயேசுவை சந்தித்த பின் காப்பாற்றப்பட்டேன் - ஐரிஷ் வீரரின் பதிவு வைரல் News Lankasri
மிக மோசமான வீழ்ச்சி... மில்லியன் கணக்கானோர் பாதிக்கப்படலாம்: எச்சரிக்கும் பொருளாதார நிபுணர்கள் News Lankasri