மூங்கிலாறு பிரதேச வைத்தியசாலை காவலாளியை தாக்க முற்பட்டதாக சந்தேகிக்கப்படும் இருவர் கைது
உடையார்கட்டு – மூங்கிலாறு பிரதேச வைத்தியசாலை பாதுகாப்பு காவலாளியை தாக்க முற்பட்டதாக சந்தேகிக்கப்படும் இருவர் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்றையதினம்(20.3.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, உடையார்கட்டு - மூங்கிலாறு பிரதேச வைத்தியசாலைக்கு நேற்றுமுன்தினம்(19) மாலை சென்ற நபர் ஒருவருக்கும் காவலாளிக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டதனை தொடர்ந்து வைத்தியசாலை காவலாளியை குறித்த நபர் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஷிரந்தி ராஜபக்ஷவின் சிகை அலங்கார பெண் உட்பட ராஜபக்சர்களின் நெருங்கியவர்களுக்கு வழங்கப்பட்ட வீடுகள்!
இருவர் கைது
இதனையடுத்து வைத்தியசாலை பிரதான வாயில் மூடப்பட்டு நேற்றையதினம் (20) மூங்கிலாறு பிரதேச வைத்தியசாலையின் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பதாகை காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்றையதினம் வெள்ளிக்கிழமை என்பதால் குறித்த கிராம நோயாளர்கள் மாதாந்த கிளினிக் சிகிச்சை பெற வந்த நோயாளர்கள், சிகிச்சை பெற வந்த பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் பெரிதும் சிரமத்தினை எதிர்கொண்டுள்ளனர்.
இதனையடுத்து குறித்த வைத்தியசாலை பாதுகாப்பு அதிகாரியினை தாக்கியதாக சந்தேகிக்கப்படும் சுதந்திரபுரம் கொலணி பகுதியினை சேர்ந்த 30, 32 அகவையுடைய இரு சந்தேகநபர்கள் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.