ஷிரந்தி ராஜபக்ஷவின் சிகை அலங்கார பெண் உட்பட ராஜபக்சர்களின் நெருங்கியவர்களுக்கு வழங்கப்பட்ட வீடுகள்!
கொழும்பு- புளுமெண்டல் வத்தை பகுதியில் வறிய மக்களுக்காக நிரை்மாணிக்கப்பட்ட சிரிசந்த வீடமைப்பு திட்டத்தின் 22 வீடுகள் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் ஷிரந்தி ராஜபக்ஷ ஆகியோரின் அரசியல் நெருக்கமானவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நீதிமன்றில் தெரிவித்துள்ளது.
சுமார் 39 கோடி ரூபா செலவில் அமைக்கப்பட்ட இந்த வீடுகள் உரிய தகுதியற்றவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அதன்படி, குறித்த வீடுகள் ஷிரந்தி ராஜபக்ஷவின் சிகை அலங்கார பெண்கள், ஜனாதிபதி செயலகத்தின் வீட்டுப்பணிப்பெண்கள் மற்றும் முன்னாள் சட்டமா அதிபரின் வீட்டுப்பணியாளர் ஆகியோருக்கு சட்டவிரோதமாக பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் இந்தத் திட்டத்தின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற பிரிகேடியர்ரஞ்சித் சமரசிங்க கைது செய்யப்பட்டுள்ளதாவும் தகவல் வெளியாகி இருந்தது.
மேலும், இது சம்பந்தமான விசாரணைகள் இடம்பெறும்.இந்த விடயம் தொடர்பில் பெயர் குறிப்பிடப்பட்டவர்களும் விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள்.
இவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது நியூஸ் இன்சைட் தமிழ் நிகழ்ச்சி....