அமெரிக்க போர் விமானங்களான F 35 - F15 திணறடிக்கும் ஈரானின் 9-Dey ஏவுகணைகள்!
அமெரிக்க போர் விமானமான F 35 ஈரான் வான் பரப்பில் தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதாக ஈரான் தரப்பு உறுதிப்படுத்தியுள்ளதுடன் அமெரிக்கா அதனை மறுத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து குறித்த விமானமானது குவைத்தில் இருக்கக்கூடிய அமெரிக்கத் தளம் ஒன்றில் தரையிறக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் உறுதிப்படுத்துகின்றன.
ஈரானின் உள்நாட்டிலே தயாரிக்கப்பட்ட 9-Dey என்கின்ற வான்பாதுகாப்பு ஏவுகணை ஒன்று குறித்த விமானத்தை இலக்கு வைத்ததாகவும் கூறப்படுகின்றது.
அத்தோடு, குறித்த விமானத்தில் இருந்த யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்ற தகவலை அமெரிக்க மத்தியகட்டளை மையம் வெளியிடுகின்றது.
மேலும், அமெரிக்க கட்டளை மையத்தினுடைய அறிக்கை சற்று சந்தேகத்தை ஏற்படுத்துகின்ற வகையில் அமைந்துள்ளது.
இந்த விடயம் தொடர்பான மேலதிக தகவல்களை கழுகுப் பார்வை நிகழ்ச்சியில் காணலாம்.