இரண்டு தனியார் வங்கி கணக்குகளுக்கு வந்த கோடிக்கணக்கான பணத்தால் சர்ச்சை
இலங்கையில் இரண்டு தனியார் வங்கி கணக்குகளில் 5 கோடி ரூபாய் பணம் வைப்பிடப்பட்டதனையடுத்து அந்த கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.
பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரருக்கு சொந்தமான இரண்டு தனியார் வங்கிகளில் வைத்திருந்த கணக்குகளை சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவு தடை விதித்துள்ளது.
"ஹிக்கடுவையைச் சேர்ந்த இஸ்ஸோ சுஜி" என அழைக்கப்படும் குணரத்ன சுஜித் சில்வாவின் வங்கிக் கணக்குகளே இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளன.
காலி சிறைச்சாலை
குறித்த கணக்குகளில் 5 கோடி ரூபாவிற்கும் அதிகமான பணம் வைப்புச் செய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணை பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
போதைப்பொருள் குற்றச்சாட்டில் தற்போது காலி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாணந்துறை நல்லுருவ பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதுடைய நபருடைய கணக்குகளே அவை என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 23 மணி நேரம் முன்

ஏர் கனடா விமான சேவை திடீர் ரத்து: பாதிப்பில் 130,000 பயணிகள்! பணியாளர்களின் கோரிக்கை என்ன? News Lankasri
