திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் டொலர் பணம் காணாமல் போயுள்ளது
நாட்டின் திறைசேரியிலிருந்து இரண்டு தசம் ஐந்து மில்லியன் டொலர் பணம் காணாமல் போய் உள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன.
இது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டு ஒன்றை ஒன்றை உள்ளார்.
அரசாங்கத்திற்கு சொந்தமான இரண்டு தசம் ஐந்து மில்லியன் டொலர் அல்லது 25 லட்சம் டொலர் பணம் காணாமல் போய் உள்ளதாக தகவல்கள் கிடைக்க பெற்றுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் வெளிநாட்டு கடன் செலுத்துகை ஒன்றை மேற்கொண்ட போது ஏற்பட்ட தவறினால் இந்த பணம் காணாமல் போய் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே பெற்றுக் கொள்ளப்பட்ட கடன் தொகை ஒன்றின் தவணை கட்டணத்தை செலுத்தும் போது உரிய சரிபார்ப்புகளை மேற்கொள்ளாது இந்தத் தொகை செலுத்தப்பட்டுள்ளது என தகவல்கள் கிடைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஹேக்கர் ஒருவரின் கைகளுக்கு இந்த பணம் சென்றுள்ளதாக தகவல்கள் கிடைக்க பெற்றுள்ளது என தெரிவித்துள்ளார்.
போலி தகவல்களை வழங்கி குறித்த ஹக்கர் அரசாங்க பணத்தை கொள்ளையடித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்த பணம் காணாமல் போன விவகாரம் தொடர்பில் நிதி அமைச்சோ அல்லது அரசாங்கத்தின் வேறு எந்தவொரு தரப்போ அதிகாரபூர்வ தகவல்கள் எதனையும் இதுவரையில் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan
கடக ராசியில் வக்ர பெயர்ச்சியடையும் புதன் : இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
நீங்க சூர்யாவா, ரஜினியா? போன் எடுக்க முடியாதா? - திமிராக பேசிய இயக்குனருக்கு விஷ்ணு விஷால் பதிலடி Cineulagam
உலக கோப்பை கால்பந்து: போட்டிக்கு பிறகு உடை மாற்றும் அறையில் ஈரான் வீரர்கள் விட்டுச் சென்ற கடிதம் News Lankasri