தாய்லாந்து பட்டப் போட்டித் திருவிழாவில் பங்கு பற்றிய முதல் யாழ். இளைஞன்
யாழ். பட்டப் போட்டித் திருவிழாவில் தனது அபாரமான கற்பனைத்திறனைக் கொண்டு போர்தாங்கி ஆகாயவிமானத்தை பறக்க விட்டு சாதனை படைத்த இளைஞனுக்கு சர்வதேச ரீதியிலான போட்டியில் பங்கு பெற வாய்ப்பு கிடைத்துள்ளது.
யாழ். வல்வெட்டித்துறையை சேர்ந்த விநோதன் எனப்படும் குறித்த இளைஞன், இந்த வருடம் நடைபெற்ற வல்வை பட்டப் போட்டித் திருவிழாவில் தனது அபாரமான கற்பனைத்திறனைக் கொண்டு போர்தாங்கி ஆகாய விமானத்தை வல்வை வான்வெளியில் பறக்கவிட்டு சாதனை படைத்துள்ளார்.
இதனையடுத்து, தற்போது தாய்லாந்தில் 36 நாடுகள் பங்குபற்றிய பட்டக்காட்சியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் கலந்து கொண்டு இரண்டு வித்தியாசமான பட்டங்களை பறக்கவிட்டுள்ளார்.
தனியார் நிறுவனமொன்றின் அனுசரணை
கடந்த 5 நாட்களில் விநோதன் தனியார் நிறுவனமொன்றின் அனுசரணை மூலம் தாய்லாந்துக்கு சென்று இரண்டு பட்டங்களை கட்டி முடித்து அதனை ஒத்திகை பார்த்து பல நாட்டு மக்கள் முன்னிலையில் பறக்க விட்டுள்ளார்.
அத்துடன் அங்கு பங்கு பற்றிய பல நாட்டுக் கலைஞர்களும் இவரால் உருவாக்கப்பட்ட பட்டத்தினை பற்றி பாராட்டியுள்ளனர்.
மேலும், உலக வரலாற்றில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி ஒருவர் பங்குபற்றுவது இதுவே முதன்முறையாகும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |