22ஆவது சட்டமூலத்திற்கு எதிராக முதல் மனு தாக்கல் - உயர் நீதிமன்றத்தில் முன்னிலையாகும் 6 சட்டத்தரணிகள்

Sri Lanka Politician Sri Lankan Peoples Sri Lanka Government Law and Order Sri Lanka Prevention of Terrorism Act
By Dhushi Oct 08, 2026 03:18 PM GMT
Report

அரசாங்கத்தால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட “பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்ட மூலத்தை சவாலுக்கு உட்படுத்தி ஊடகவியலாளர்களான எம்.எப்.எம்.பஸீர் மற்றும் தரிந்து உடுவரகெதர சார்பாக கௌரி சங்கரி சட்ட நிறுவனத்தின் சட்டத்தரணி தர்மராஜா தர்மஜா ஆகியோரால் உயர் நீதிமன்றத்தில் முதல் மனுவை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்த சட்ட மூலமானது, அரசியலமைப்புக்கு விரோதமானது என அறிவிக்கக் கோரியே இவ்வாறு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இலங்கை மக்களின் உரிமைக்கான மனு

இந்த மனு அரசியலமைப்பின் 120 மற்றும் 121 பிரிவுகளின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், சட்டமா அதிபர் பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.

மனுதாரர்கள், தாங்கள் இந்த மனுவைத் தனிப்பட்ட உரிமைகளுக்காக மட்டுமல்லாமல், இலங்கை மக்களின் உரிமைகளைப் பாதுகாத்தல், சட்டத்தின் ஆட்சியையும் அரசியலமைப்பையும் மதித்தல் மற்றும் அடிப்படை உரிமைகளைப் பாதுகாத்தல் ஆகிய பொது நலனுக்காகவும் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

22ஆவது சட்டமூலத்திற்கு எதிராக முதல் மனு தாக்கல் - உயர் நீதிமன்றத்தில் முன்னிலையாகும் 6 சட்டத்தரணிகள் | 1St Petition Filed Against 22Nd Amendment Bill

கடந்த 18.09.2026 ஆம் திகதியிடப்பட்ட வர்த்தமாணி அறிவிப்பில், வெளியிடப்பட்ட இந்த சட்ட மூலம், அக்டோபர் 6 ஆம் திகதி அன்று, நாடாளுமன்றத்தின் நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த சட்ட மூலம் 06.10.2026 நாடாளுமன்றத்தில் முதல் வாசிப்பிற்காக முன்வைக்கப்பட்டது.

மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள விடயங்கள்

தற்போதுள்ள குற்றவியல் சட்டங்களின் கீழ் வரும் ஒரே மாதிரியான அல்லது ஒத்த செயல்களுக்கு இந்த சட்ட மூலம் ஒரு தனி சட்ட நடைமுறையை உருவாக்குவதாகவும் இதன் மூலம் அரசியலமைப்பின் 12(1) பிரிவின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள சட்டத்தின் முன் சமத்துவத்திற்கான உரிமை மீறப்படுவதாகவும் இந்த மனு ஊடாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், “தேசியப் பாதுகாப்பு" மற்றும் "அவசரநிலை" போன்ற காரணங்களுக்காக எந்தவொரு அவசரநிலையும் அறிவிக்கப்படாத போதும் இந்த சட்ட மூலத்தின் பிரகாரம் அடிப்படை உரிமைகளில் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க அனுமதிக்கிறது என்றும் மனுதாரர்கள் கூறுகின்றனர்.

22ஆவது சட்டமூலத்திற்கு எதிராக முதல் மனு தாக்கல் - உயர் நீதிமன்றத்தில் முன்னிலையாகும் 6 சட்டத்தரணிகள் | 1St Petition Filed Against 22Nd Amendment Bill

மேலும், இந்த சட்ட மூலத்தின் 3வது பிரிவில் உள்ள “பயங்கரவாதம்” என்பதற்கான வரையறை தெளிவற்றதாகவும் மிகவும் பரந்ததாகவும் உள்ளது என்றும் அந்த மனு குற்றம் சாட்டுகின்றது.

ஒட்டுமொத்தமாக எடுத்துக்கொண்டால் இந்த சட்டமூலமானது அரசியலமைப்பின் 13(3) ஆம் உறுப்புரையின் கீழ் பாதுகாக்கப்பட்ட நியாயமான விசாரணைக்கான உரிமையையும், 13(5) ஆம் உறுப்புரையின் கீழ் பாதுகாக்கப்பட்ட குற்றமற்றவர் என்ற ஊகத்தையும் கடுமையாகப் பாதிக்கின்றது எனக் கூறுகின்றனர்.

இந்த சட்டமூலமானது, அதன் அதிகப்படியான பரந்த குற்றங்கள், நிறைவேற்றுத் துறையின் தடுத்து வைப்பு அதிகாரங்கள் மற்றும் போதுமான நீதித்துறைப் பாதுகாப்பின்மை காரணமாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு உட்பட உள்நாட்டு மற்றும் சர்வதேச ரீதியில் தொடர்ச்சியான விமர்சனங்களுக்கு உள்ளான சட்டமான 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தை (“PTA”) நீக்கிவிட்டு அதற்குப் பதிலாக பிரதியீடு செய்யவே ஒழுங்குப் பத்திரத்தில் வைக்கப்பட்டுள்ளது போன்று தோன்றுகிறது.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டமானது நீண்ட மற்றும் ஆவணப்படுத்தப்பட்ட துஸ்பிரயோக வரலாற்றைக் கொண்டுள்ளது.

பொதுமக்களின் அதிகார வரம்பை பாதிக்கும் சட்டமூலம்

பொதுமக்களின் அதிகார வரம்பு தொடர்பான நிர்வாக அதிகாரங்களை வழங்கும் விதிகளையும் இது கொண்டுள்ளது என்றும், இந்த சட்ட மூலம் முழுவதுமே நியாயமான விசாரணைக்கான உரிமை மற்றும் குற்றம் நிரூபிக்கப்படும் வரை நிரபராதி எனக் கருதப்படும் உரிமை ஆகியவற்றைப் பாதிக்கிறது என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

22ஆவது சட்டமூலத்திற்கு எதிராக முதல் மனு தாக்கல் - உயர் நீதிமன்றத்தில் முன்னிலையாகும் 6 சட்டத்தரணிகள் | 1St Petition Filed Against 22Nd Amendment Bill

தற்போது உள்ளவாறான “அரசைப் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாத்தல்” எனும் தலைப்பிலான முன்மொழியப்பட்ட சட்டமூலம் அதன் ஏற்பாடுகள் அல்லது அதன் பிரிவுகள் அரசியலமைப்புக்கு அல்லது அதன் ஒரு பகுதிக்கு முரணானவை என்றும், அத்தகைய சட்டமூலம் அல்லது அதன் ஏற்பாடுகள் அல்லது அதன் பிரிவுகள் அரசியலமைப்பின் 84(2) ஆம் உறுப்புரையின் விதிகளின் கீழ் தேவைப்படும் சிறப்புப் பெரும்பான்மையினால் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே சட்டமாக மாற வேண்டும் எனற கோரிக்கையுடனும் குறித்த மனு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மனு சார்பில் சட்டத்தரணி தர்மராஜா தர்மஜாவின் ஆலோசனைக்கமைய சட்டத்தரணிகளான சிபான் மஹ்ஷரூப், சாலினி பெர்ணான்டோ, நெஹன்சா வீரசிங்க, ஹோசதி ஹப்பு ஆரச்சி, அழகரத்னம் ஜினோசன், ஆகியோருடன் சிரேஸ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் நீதிமன்றத்தில் முன்னிலையாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

திருகோணமலை மான் பூங்காவை பார்வையிட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு வாய்ப்பு

திருகோணமலை மான் பூங்காவை பார்வையிட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு வாய்ப்பு

சிரந்தியைத் தொடர்ந்து அநுரவின் அடுத்த வேட்டை : நாமலுடன் அர்ச்சுனா செய்த டீல்

சிரந்தியைத் தொடர்ந்து அநுரவின் அடுத்த வேட்டை : நாமலுடன் அர்ச்சுனா செய்த டீல்


மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US