அகதிகளைக் குறிவைத்த யுத்தத் தாங்கி! இந்தியப் படை அதிகாரியின் கொடூர முகம்
1987ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 25ஆம் திகதி யாழ். கொக்குவில் அகதிகள் முகாம் மீது இந்தியப் படையினர் கொலைவெறித் தாக்குதலை நடத்தினர்.
யாழ்ப்பாணம் கொக்குவிலுக்குள் இந்தியப் படையினர் உள்நுழைந்த போது, கொக்குவில் இந்துக் கல்லூரியிலேயே அதிகமான மக்கள் தஞ்சமடைந்திருந்தனர்.
கொக்குவில் இந்துக் கல்லூரி அகதிகள் முகாமில் சுமார் 7,000 அகதிகள் வரை அப்போது தங்கியிருந்தனர்.
மூன்று மாடி கட்டடமான கொக்குவில் இந்துக் கல்லூரியில் அகதிகள் முகாம் என ஆங்கிலத்தில் எழுதப்பட்ட பலகையொன்றும் தொங்க விடப்பட்டிருந்தது.
அகதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்த மாட்டார்கள் என்றே அங்கு தங்கியிருந்த மக்கள் நம்பியிருந்தனர்.
எனினும், இந்தியப் படையினரையும் கேணல் மிஷ்ராயையும் ஏற்றிக்கொண்டு வந்த யுத்த தாங்கி, அவர்கள் மீது தாக்குதல் நடத்தியது.
இவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது அவலங்களின் அத்தியாயங்கள் நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




