புதுக்குடியிருப்பில் 194 பேர் தனிமைப்படுத்தலில்! பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்

Ioslation
By Independent Writer Dec 28, 2020 08:23 PM GMT
Report

புதுக்குடியிருப்பில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மரக்கறி மொத்த வியாபாரத்தில் ஈடுபட்ட நபருடன் தொடர்புடைய 65 பேரும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் 129 பேருமாக 194 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் எழுமாறாக நடத்தப்பட்ட பி. சி.ஆர் பரிசோதனையில் நேற்றுமுன்தினம் வெளியான முடிவுகளில் (26) ஒருவர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார் .

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்றுமுன்தினம் (26) நடத்தப்பட்ட பரிசோதனையில் ஒருவருக்கு தொற்று உறுதியானது. யாழ் போதனா வைத்தியசாலையில் நேற்றுமுன்தினம் 416 பேரின் பி.சி.ஆர் மாதிரிகள் சோதனைக்குட்படுத்தப்பட்டது.

இதில் புதுக்குடியிருப்பு கோம்பாவில் பகுதியை சேர்ந்த மரக்கறி மொத்த வியாபாரி ஒருவர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் தம்புள்ள பகுதிக்கு சென்று மரக்கறிகளை பெற்று வந்து புதுக்குடியிருப்பு உடையார்கட்டு விசுவமடு சந்தை வியாபாரிகளுக்கு வழங்கும் நபர் என முதல்கட்ட விசாரணைகளில் உறுதியாகியது.

புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் தம்புள்ளவிற்கு செல்பவர்கள் உள்ளிட்ட மரக்கறி வியாபாரிகள் சிலரிடம் அண்மையில் எழுமாறாக பி.சி.ஆர் மாதிரிகள் பெறப்பட்டது. எழுமாறாக பி.சி.ஆர் மாதிரிகளை பெற்றமையால், மாதிரிகள் பெறப்பட்ட யாரும் தனிமைப்படுத்தப்படவில்லை. இப்படி, மாதிரி பெறப்பட்ட ஒருவரே தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் (26) மாலை பி.சி.ஆர் முடிவுகள் கிடைக்கும் வரை குறித்த நபர் சமூகத்தில் நடமாடியுள்ளார். இதனால் புதுக்குடியிருப்பு பகுதி அபாய வலயமாகுமா என மக்கள் மத்தியில் அச்சம் தோன்றியுள்ள நிலையில் குறித்த நபர் வீட்டுக்குள் முடக்கப்பட்டு இராணுவம் பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டு சுகாதார அதிகாரிகள் குறித்த நபர் நடமாடிய இடங்கள் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொண்டு அவர் கிளிநொச்சி கிருஷ்ணபுரத்தில் உள்ள கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு நோயாளர் காவுவண்டியில் அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அவருடன் தொடர்பிலிருந்தவர்கள் தனிமைப்படுத்தப்படும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டது இதனடிப்படையில் மரக்கறி மொத்த வியாபாரத்தில் ஈடுபட்ட நபருடன் தொடர்புடைய 65 பேரும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் 129 பேருமாக 194 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என தெரியவருகிறது.

இதேவேளை புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் பல்வேறுபட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக இராணுவத்தினர் சந்தை வளாகம் மற்றும் வர்த்தக தொகுதிகளை கிருமி தொற்று நீக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு இருப்பதனை அவதானிக்க கூடியதாக இருந்த அதே நேரம் பொலிசார் குறித்த தொற்றாளியுடன் தொடர்புகளை மேற்கொண்ட நபர்களை அடையாளம் காணும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

அத்துடன் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் கிராமங்களுக்குச் சென்று குறித்த தொற்றாளியுடன் நேரடியாக தொடர்புகளை மேற்கொண்டிருந்த நபர்களை அடையாளம் காணும் நடவடிக்கையிலும் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளிலும் ஈடுபட்டனர்.

இப்பகுதிகளில் சந்தை நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளதுடன் பல இடங்களிலும் மீன் வியாபார மரக்கறி வியாபாரம் நிறுத்தப்பட்டுள்ளது. குறித்த தொற்றாளி தம்புள்ள சந்தையில் இருந்து மரக்கறிகளை புதுக்குடியிருப்பு, விசுவமடு, உடையார்கட்டு உள்ளிட்ட சந்தைகளுக்கு விநியோகம் செய்பவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. நேற்று முன்தினம் (26) இரவு வரை குறித்த நபர் சமூகத்தில் நடமாடி இருப்பதனால் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US