விவசாயிகளுக்கு உரமானியமாக இதுவரை 190 மில்லியன் ரூபா வைப்பில்!
கிளிநொச்சி மாவட்டத்தில் 2025 ஆம் ஆண்டு சிறுபோக செய்கைக்காக அரசாங்கத்தின் உர மானியமாக இதுவரை 6200 விவசாயிகளுக்கு 7600 ஏக்கர் நிலப்பரப்புக்காக 190 மில்லியன் ரூபா வைப்பில் இடப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தின் சிறுபோக செய்கை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
உர மானியம்
இது தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,''கிளிநொச்சி மாவட்டத்தில் 2025ம் ஆண்டு சிறுபோக செய்கையாக 10800 ஹெக்டேயரில் பயிர் செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் போதிய மழை வீழ்ச்சி கிடைக்கப்பெற்றுள்ளது. குளங்களில் போதுமான அளவு நீர் காணப்படுகின்றது.
2025 சிறுபோக செய்கைக்காக உர மானியமாக இதுவரை 6200 விவசாயிகளுக்கு 7600 ஏக்கர் நிலப்பரப்புக்காக 190 மில்லியன் ரூபா வைப்பில் இடப்பட்டுள்ளது.
ஏனைய விவசாயிகளுக்கு அவர்களின் விபரங்கள் சரிபார்க்கப்பட்டு, உரமானியம் வழங்கும் நடவடிக்கை கமநல சேவை நிலையங்கள் மூலம் முன்னெடுக்கப்படுகிறது.''என தெரிவித்துள்ளார்.

சீனாவைப் புறக்கணிக்கும் இந்திய மின்னணு உற்பத்தியாளர்கள் - தாய்வான், தென்கொரிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் News Lankasri

கடலுக்கு அடியில் மிகப்பெரிய ஜாக்பாட்டை கண்டுபிடித்த இந்தியாவின் நட்பு நாடு.., ஆனால் ஒரு சிக்கல் News Lankasri
