பெரிய வெங்காயத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!
இறக்குமதி செய்யப்பட்ட பெரிய வெங்காயத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, இறக்குமதி செய்யப்பட்ட பெரிய வெங்காயத்தின் ஒரு கிலோ மொத்த விலை 80 ரூபாயாகக் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த பண்டிகை காலத்தில், ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் சில்லறை விலை 280 ரூபாவாக உயர்ந்திருந்தது.
விலையில் ஏற்பட்ட மாற்றம்
இதேவேளை, இந்தியா, பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளிலிருந்து பெரிய வெங்காயம் இறக்குமதி செய்யப்படுவதாக இறக்குமதியாளர்கள் கூறுகின்றனர்.
தற்போது, கடந்த சிறுபோக பருவத்தில் பயிரிடப்பட்ட உள்ளூர் பெரிய வெங்காயத்தின் இருப்பு தீர்ந்துள்ள தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அடுத்த சிறுபோக அறுவடை வரை சுமார் பத்து மாதங்களுக்கு பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது எனவும் இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

பேரக்குழந்தைகளுக்கு தோழியாகவே மாறிவிடும் பாட்டிகள் இந்த ராசியினர் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

உலகின் கொடூரமான சிறை - ஒவ்வொரு கைதிக்கும் நாளொன்றுக்கு ரூ.85 லட்சம் செலவிடும் அமெரிக்கா News Lankasri
