மட்டக்களப்பில் கடலுக்கு சென்ற 19 வயது இளைஞருக்கு நேர்ந்த கதி - துயரில் குடும்பத்தினர்
மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி கடலுக்கு சிறிய படகில் கடற்றொழிலுக்கு சென்ற 19 வயது இளைஞர் காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த நிலையில், சடலமாக கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்று(25.05.2026) இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இளைஞர் சடலமாக மீட்பு
களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்ப்பட்ட களுதாவளை, சிறி முருகன் கோவில் வீதியைச் சேர்ந்த 19 வயதுடைய விஜயகுமார் விஜயகாந்த், சம்பவ தினமான சனிக்கிழமை மாலை 6.00 மணியளவில் கடலில் மீன்பிடிப்பதற்காக சிறிய படகில் தனியாக கடலுக்கு சென்றுள்ளார்.
அதன் பின்னர், ஞாயிற்றுக்கிழமை காலை ஆகியும் வீடு திரும்பவில்லை என உறவினர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.

இதனையடுத்து, படகில் சென்று குறித்த பகுதியில் கடற்றொழிலாளர்கள் தேடிய போது, விஜயகாந்த் சென்ற படகை கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், இளைஞர் காணாமல் போயுள்ளார்.
இதனைத் தொடர்ந்து நேற்று(25) சடலமாக மீட்கப்பட்டு, பிரேத பிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.