யாழ்.சுன்னாகத்தில் 19 வயது மாணவன் திடீரென உயிரிழப்பு
யாழ்ப்பாணம் சுப்பிரமணியம் வீதி, கந்தரோடை, சுன்னாகம் பகுதியை சேர்ந்த 19 வயதுடைய மாணவன் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.
கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரி மாணவன் சிறீதரன் சுஜிதரன் என்ற மாணவனே உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவனுக்கு கடந்த 27ஆம் திகதி மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்ட நிலையில் இணுவில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளார்.
பின்னர் அடுத்த நாளான 28ஆம் திகதியும் இணுவில் வைத்தியசாலைக்கு சிகிச்சை சென்றுள்ளார்.
இதயத்தசை வளர்ச்சி
இவ்வாறு சிகிச்சை பெறுவதற்கு சென்றவருக்கு திடீரென உடல் மேலும் சுகயீனம் அடைந்த நிலையில் நோயாளர் காவு வண்டி மூலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளார் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
மிகைப்படுத்தப்பட்ட இதயத்தசை வளர்ச்சியாலேயே குறித்த மரணம் நிகழ்ந்துள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





பெற்றோரையே வீட்டில் சேர்க்காத விஜய்; அவரது சுபாவமே அதுதான் - நெப்போலியன் கடும் விமர்சனம் News Lankasri

உலக சாதனை செய்துள்ள சூப்பர் சிங்கர் புகழ் சரண் ராஜா... இன்ப அதிர்ச்சியில் அரங்கம், வீடியோ இதோ Cineulagam

வயிற்றுல அடிச்சாங்க.. பாதிக்கப்பட்ட ஜாய் கிறிஸ்டா மகன் - கசிந்த குரல் பதிவுக்கு கிளம்பும் விமர்சனம் Manithan
