இராவணனின் 19 விமானங்கள்.. வெளியான முக்கிய அறிவிப்பு
இலங்கையின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (CAASL), ராவண மன்னனுடன் தொடர்புடைய 19 விமானங்களை மீட்க திட்டமிட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகளை மறுத்துள்ளது.
மேலும், குறித்த திட்டம் தொடர்பான செய்திகள் முற்றிலும் தவறானவை மற்றும் ஆதாரமற்றவை என்று இலங்கையின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் கூறியுள்ளது.
வலியுறுத்தல்..
ஆணையம் அத்தகைய கூற்றை முன்வைக்கவில்லை அல்லது அது தொடர்பான எந்த திட்டத்திலும் ஈடுபடவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளது.
தேசிய சட்டங்கள் மற்றும் சிகாகோ மாநாட்டின்படி, பாதுகாப்பு மற்றும் நிலையான வளர்ச்சியில் கவனம் செலுத்தி, சிவில் விமானப் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதும் மேற்பார்வையிடுவதும் தனது பங்கு என்று CAASL வலியுறுத்தியுள்ளது.
விமானப் போக்குவரத்துத் துறையின் நம்பகத்தன்மைக்கு தீங்கு விளைவிக்கும் தவறான தகவல்களைப் பரப்புவதைத் தவிர்ப்பதற்காக, வெளியிடுவதற்கு முன்பு CAASL உடன் தகவல்களைச் சரிபார்க்குமாறு பொதுமக்களும் ஊடகங்களும் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 1 மணி நேரம் முன்

பாகிஸ்தான் உளவுத்துறையுடன் ரகசிய தொடர்பு., இந்தியாவின் DRDO விருந்தினர் இல்ல மேலாளர் கைது News Lankasri
