தேசிய கராத்தே போட்டியில் வவுனியாவிற்கு 19 பதக்கங்கள் (Photos)
தேசிய கராத்தே போட்டியில் வவுனியா 19 பதக்கங்களை வென்றுள்ளது.
தேசிய கராத்தே சம்மேளனத்தின் 2023ஆம் ஆண்டுக்கான மாவட்ட ரீதியிலான தெரிவு போட்டி கிளிநொச்சி உள்ளக விளையாட்டரங்கில் 22, 23ஆம் திகதிகளில் நடைபெற்றிருந்தது.
இதில் 22 ஆம் திகதி நடைபெற்ற போட்டியில் நிப்பான் கராத்தே சங்கம் 8 தங்கப் பதக்கங்கள் 2 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 1 வெண்கலப் பதக்கங்களைப் பெற்றுள்ளது.

வவுனியாவிற்கு 19 பதக்கங்கள்
நேற்று (23.07.2023) நடைபெற்ற போட்டியில் நிப்பான் கராத்தே சங்கம் 4 தங்கப் பதக்கங்கள் மற்றும் 4 வெண்கலப் பதக்கங்களைப் பெற்றுள்ளது.
வவுனியா மாவட்ட ரீதியில் 12 தங்கப் பதக்கங்களையும், 2 வெள்ளிப் பதக்கங்களையும், 5 வெண்கலப் பதக்கங்களையும் பெற்றுக் கொண்டுள்ளது.
வெற்றி பெற்ற சாதனையாளர்களுக்கு ஞா.ஞானகீதன் ஆசிரியர் பயிற்றுவித்திருந்தார்.


| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
பிரித்தானியாவில் 600க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து: 65,000க்கும் மேற்பட்ட பயணிகள் அவதி News Lankasri
அமெரிக்கா மீது பதிலடி கொடுக்கும் வகையிலான கனடாவின் வரிகள்: எந்தெந்த பொருட்கள் பாதிக்கப்படும்? News Lankasri