வவுனியா - ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவில் 19 குடும்பங்கள் தனிமைப்படுத்தலில்
வவுனியா, ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவில் 2 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 19 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
கிடாச்சூரி, கோதண்டர் நொச்சிக்குளம் ஆகிய இரு கிராமங்களில் 2 கோவிட் சமூகத்தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்துடன் அவர்களுடன் தொடர்பைப் பேணிய 19 குடும்பங்கள் சுகாதார பிரிவினரால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
குறித்த பிரதேசத்தில் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் போதே இவ்விரு தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.
அத்துடன், இவர்களில் ஒருவர் சிறுநீரக நோய் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் 40 நாட்களாகச் சிகிச்சை பெற்று வீடு திரும்பியவராவார்.
குறித்த நபரைப்
பார்வையிடுவதற்காகச் சென்ற நபர்களே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் யாருக்கு வெற்றி..! யாருக்கு தோல்வி 17 மணி நேரம் முன்

மணிமேகலையை தாக்கி தான் ரக்ஷன் இப்படி பேசினாரா.. குக் வித் கோமாளி 6ல் என்ன கூறினார் பாருங்க Cineulagam

போட்டோஸ் ஓவர், திருமணத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோவை வெளியிட்ட தொகுப்பாளினி பிரியங்கா.. இதோ Cineulagam
