படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 18ஆவது ஆண்டு நினைவேந்தல்
திருகோணமலையில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுப்ரமணியம் சுகிர்தராஜனின் 18ஆவது ஆண்டு நினைவு தினத்திற்காக நினைவேந்தல் நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வு, நேற்றைய தினம் (24.01.2024) மாலை மட்டக்களப்பு காந்திப் பூங்காவில் அமைந்துள்ள தூபியில் இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், மட்டக்களப்பு ஊடக அமையம், கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் என்பனவற்றின் ஏற்பாட்டில் இந்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
திருவுருவப் படத்திற்கு அஞ்சலி
இந்நிலையில், மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் வா.கிருஸ்ணகுமார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது, அமரர் சுகிர்தராஜனின் திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டதுடன் வருகை தந்தோர் அனைவராலும் மலர்தூவி, சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





