செஞ்சோலை படுகொலையின் 18ஆம் ஆண்டு நினைவுக்கூரல்
யாழ்ப்பாண பல்கலைக்கழகம்
செஞ்சோலை படுகொலையின் 18ஆம் ஆண்டு நினைவுக்கூரல் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பல்கலைக்கழக பிரதான வளாகத்தில் நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது கொல்லப்பட்டவர்களின் உருவப்படங்களுக்கு பல்கலைக்கழக மாணவர்களால் சுடரேற்றி, மலர் தூபி அஞ்சலி செலுத்தப்பட்டது.
நினைவேந்தலில் பல்கலைக்கழக மாணவர்கள், கல்விசாரா ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
செய்தி - தீபன்
முல்லைத்தீவு செஞ்சோலை வாளாகம்
முல்லைத்தீவு (Mullaitivu) மாவட்டம் வள்ளிபுனம் செஞ்சோலை வாளாகத்தில் கடந்த 2006ஆம் ஆண்டு விமானத்தாக்குதலில் கொல்லப்பட்ட 54 மாணவச் செல்வங்களின் 18ஆம் ஆண்டு நினைவுநாள் நினைவு கூறப்பட்டுள்ளது.
செஞ்சோலை வளாகத்தின் நினைவு வளைவு அமைந்துள்ள முன்வீதியில் தாய்த்தமிழ் பேரவையினரில் ஏற்பாட்டில் நேற்று (14.08.20224) குறித்த நிகழ்வுகள் ஆரம்பமாகியது.
இந்நிகழ்வில், பொது ஈகை சுடரினை செஞ்சோலை வளாகத்தில் படுகொலை செய்யப்பட்ட 2 பிள்ளைகளின் தந்தையார் ஏற்றிவைத்தார்.
பொதுமக்கள்
அதனைத் தொடர்ந்து படுகொலை செய்யப்பட்ட பெற்றோர் பிள்ளைகளின் திருவுருவப்படத்துக்கு சுடர் ஏற்றி மலர்மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினர்.
இந்நிகழ்வில் அரசியல்வாதிகள், சமூக செயற்பாட்டாளர்கள், தமிழ்த்தேசிய செயற்ப்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

தினமும் 300 ரூபாய்க்கு கூலி வேலை செய்து கொண்டே நீட் தேர்வில் தேர்ச்சி.., மதிப்பெண் எவ்வளவு தெரியுமா? News Lankasri

பேரக்குழந்தைகளுக்கு தோழியாகவே மாறிவிடும் பாட்டிகள் இந்த ராசியினர் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
