மொனராகலையில் 16 வயது சிறுமிக்கு நடத்த கொடூரம்: நாடாளுமன்ற பெண் உறுப்பினர்கள் காட்டம்
மொனராகலை - தனமல்விலவில் 16 வயது சிறுமி தகாத முறைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்தை கண்டித்துள்ள நாடாளுமன்ற பெண் உறுப்பினர்கள் பேரவை, இலங்கையின் அனைத்து பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளும் தங்கள் கடமைகளில் தவறிவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளது.
இந்தநிலையில், சிறுவர்கள் மற்றும் பெண்கள் மீதான துஸ்பிரயோகத் தடுப்பு பணியகம் மற்றும் தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு ஆணையம் ஆகியவை, குறித்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரையும் மேற்பார்வையிடவும், மேலும் துன்புறுத்தலுக்கு ஆளாகாமல், சிறுமியை கண்ணியத்துடன் நடத்துவதை உறுதிசெய்யவும் பேரவை அழைப்பு விடுத்துள்ளது.
பாடசாலை மாணவர்களைப் பாதுகாப்பதற்கும் முன்னுரிமை
இதுபோன்ற சந்தர்ப்பங்கள் எழும் போது அவற்றை எவ்வாறு திறம்பட மற்றும் உணர்வுடன் கையாள்வது என்பது குறித்து நாடு தழுவிய ரீதியில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கான நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துமாறு கல்வியமைச்சகத்தை பேரவை வலியுறுத்தியுள்ளது.
கல்வி அமைச்சும், சுகாதார அமைச்சும் என்பன ஒழுக்க விழுமியங்களை ஊக்குவிப்பதற்கும், பிறருக்கு மரியாதை செய்வதற்கும், ஆபாசப் படங்கள், போதைப்பொருள்கள், மதுபானம் மற்றும் பிற போதைப் பழக்கங்களிலிருந்து பாடசாலை மாணவர்களைப் பாதுகாப்பதற்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும்.
மேலும், துன்புறுத்தப்படும் சிறுவர்களை பரிசோதிப்பதில் ஈடுபட்டுள்ள மருத்துவ அதிகாரிகள் மற்றும் பிற அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, அவர்களை இரக்கத்துடனும் அக்கறையுடனும் செயற்படுவதற்கான பயிற்சிகளை சுகாதார அமைச்சகம் மற்றும் நீதி அமைச்சகம் வழங்கவேண்டும் என்றும் நாடாளுமன்ற பெண் உறுப்பினர்கள் பேரவை வலியுறுத்தியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்





பிரித்தானியாவில் மகன் பிறந்து.,இரண்டு மாதங்களில் மாயமான 28 வயது தந்தை: காத்திருந்த அதிர்ச்சி News Lankasri

தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan
