ஓட்டமாவடியில் 18 பேருக்கு தொற்று உறுதி
ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் 45 பேருக்கு இன்று சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனை மூலம் 18 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக் தெரிவித்தார்.
ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கோவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட நிலையில் ,ஓட்டமாவடி பிரதேசத்தில் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக் தலைமையில் பி.சி.ஆர். மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.
அந்த வகையில் கோவிட் தொற்றாளர்களுடன் முதல் தொடர்புடைய உறவினர்கள் 45 பேருக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. நிலையில் 18 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக் தெரிவித்தார்.
குறித்த அன்டிஜன் பரிசோதனையில் மேற்பார்வை பொதுச்சுகாதார பரிசோதர் ஏ.எல்.நௌபர் ,பொதுச்சுகாதார பரிசோதகர்கள், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள், வாழைச்சேனை பொலிஸார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நாட்டில் கோவிட் வைரஸ் தாக்கத்தின் மூன்றாவது அலை பரவியுள்ள நிலையிலும், ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவிலும் அதிகரித்து காணப்படும் நிலையில் பொதுமக்கள் விழிப்புடன் இருந்து பிரதேசத்தினை பாதுகாத்துக்கொள்ளுமாறு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக் தெரிவித்தார்.