1700 ரூபாய் சம்பள விடயம் தேர்தல் கால வாக்குறுதியாக இருந்து விடக் கூடாது : ஸ்ரீதரன் விசனம்

Sri Lanka Upcountry People Sri Lanka Presidential Election 2024
By Thirumal Aug 13, 2024 09:22 AM GMT
Report

தோட்டத் தொழிலாளர்களுக்கான 1700 ரூபாய் சம்பளமானது தேர்தல் கால வாக்குறுதியாக இருந்து விடக்கூடாது என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் நிதிச் செயலாளரும், மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படைச் சம்பளமாக 1350 ரூபாவும் வருகை மற்றும் ஊக்குவிப்பு கொடுப்பனவாக 350 ரூபாவும் வழங்குவதற்கு சம்பளம் நிர்ணய சபையின் ஊடாக தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மன்னாரில் உண்ணாவிரதத்தில் குதித்த வைத்தியர்

மன்னாரில் உண்ணாவிரதத்தில் குதித்த வைத்தியர்

சம்பள நிர்ணய சபை

இந்தத் தீர்மானம் தொடர்பில் எதிர்வரும் 14 நாட்களுக்குள் தமது ஆட்சேபனையைத் தெரிவிக்கலாம் எனவும் தொழிற் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதேவேளை 1350 ரூபாய் அடிப்படைச் சம்பளத்தை வழங்க முடியும் என்று தோட்ட முதலாளிமார் சம்மேளனமும் அறிவித்துள்ளது.

1700 ரூபாய் சம்பள விடயம் தேர்தல் கால வாக்குறுதியாக இருந்து விடக் கூடாது : ஸ்ரீதரன் விசனம் | 1700 Rupees Should Not Be An Election Promise

மேலும் தோட்ட முதலாளிமார் சம்மேளனம் முன் வைத்துள்ள நிபந்தனைகளை ஏற்க முடியாது என்று அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் ஆட்சேபனைத் தெரிவித்து வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லையெனவும் தெரிய வருகின்றது.

மேலும் சம்பள நிர்ணய சபையின் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்த சில தொழிற்சங்கங்கள் தோட்டத் தொழிலாளர்களின் 1700 ரூபாய் சம்பளத்திற்காக தொடர்ந்து குரல் கொடுப்பதாகவும் ஊடக அறிக்கை வெளியிட்டுள்ளன.

இரண்டாவது நாளாக தொடரும் கிராம உத்தியோகத்தர்களின் பணிப்புறக்கணிப்பு

இரண்டாவது நாளாக தொடரும் கிராம உத்தியோகத்தர்களின் பணிப்புறக்கணிப்பு

புதிய சம்பள திட்டம்

இந்த நிலையில் தேர்தல் கண்காணிப்பு குழு ஒன்றும் சம்பள நிர்ணய சபையின் தீர்மானம் குறித்து தேர்தல் ஆணைக்குழுவின் கவனத்துக்கு கொண்டு வரப்படும் என்றும் அறிவித்துள்ளது.

ஆகவே இவற்றையெல்லாம் ஆராய்ந்து பார்க்கும் போது தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபாய் சம்பளம் கிடைக்குமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.

1700 ரூபாய் சம்பள விடயம் தேர்தல் கால வாக்குறுதியாக இருந்து விடக் கூடாது : ஸ்ரீதரன் விசனம் | 1700 Rupees Should Not Be An Election Promise

மேலும் இந்தப் புதிய சம்பள திட்டம் உடனடியாக நடைமுறைப்படுத்தும் பட்சத்தில் தோட்டத் தொழிலாளர்களின் செப்டம்பர் மாதச் சம்பள பட்டியலில் உள்ளடக்கும் வகையில் குறிப்பிட்ட தொழிற்சங்கங்கள் உறுதி செய்யப்பட வேண்டும்.

ஆகவே தோட்டத் தொழிலாளருக்கான 1700 ரூபாய் சம்பளம் விடயமானது தேர்தல் கால வாக்குறுதியாக இருந்து விடக் கூடாது.

இவ்வாறு இருக்கும் பட்சத்தில் அது தோட்டத் தொழிலாளர்களுக்கு செய்யப்படுகின்ற மேலுமொரு அநீதி ஆகும் என குறிப்பிட்டுள்ளார்.

செவ்வாய் கிரகத்தில் நிலத்தடி நீர் ஆதாரம் குறித்து நாசா வெளியிட்ட தகவல்

செவ்வாய் கிரகத்தில் நிலத்தடி நீர் ஆதாரம் குறித்து நாசா வெளியிட்ட தகவல்

வெளிநாட்டில் கைது செய்யப்பட்ட பாதாள உலக தலைவர்கள்: எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

வெளிநாட்டில் கைது செய்யப்பட்ட பாதாள உலக தலைவர்கள்: எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 


19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US