மாத்தளையில் கொடூரமாக தாக்கப்பட்டு மாணவன் ஒருவர் படுகொலை
மாத்தளை - மடவலவுல்பத்த பகுதியில் 17 வயது மாணவன் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மடவளை - நாலந்தவத்தை பகுதியைச் சேர்ந்த மேற்படி மாணவன், நண்பர்கள் இருவருடன் மடவலவுல்பத்த பிரதேசத்துக்கு நேற்று முன்தினம் சென்றுள்ளார்.
வைத்தியசாலையில் அனுமதி
நண்பர் ஒருவரின் காதலியைச் சந்திப்பதற்காக குறித்த மாணவன் சென்றுள்ள நிலையில், காதலியின் தந்தை மற்றும் சகோதரர் உள்ளிட்ட குழுவினர் அவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து, காயமடைந்த மூன்று மாணவர்களும் நாலந்தவத்தை பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில், ஒரு மாணவன் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் 55 வயதுடைய காதலியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.





சண்டே ஸ்பெஷல்: இந்த வாரம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் எது தெரியுமா?.. வெளிவந்த புரொமோ Cineulagam

உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri

பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம்! இறந்துவிட்டதாக பரவிய செய்தி பற்றி குடும்பத்தினர் விளக்கம் Cineulagam
