தாய்லாந்தில் தீப்பிடித்து எரிந்த பேருந்து: 22 மாணவர்கள் பலி
தாய்லாந்து தலைநகர் பேங்கொக்கில் பாலர் வகுப்பு மாணவர்களை ஏற்றிச்சென்ற பேருந்தானது தீப்பிடித் சம்பவத்தில் 22 மாணவர்கள் உட்பட 25 பேர் பலியாகியுள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று(02.10.2024) இடம்பெற்றுள்ளது.
தாய்லாந்தில் 44 பேருடன் பயணத்தை மேற்கொண்ட சுற்றுலா பேருந்தில் ஏற்பட்ட தீவிபத்திலேயே குறித்த 25 பேரும் உயிரிழந்துள்ளனர்.
வேகமாகப் பரவிய தீ
சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில்,
தாய்லாந்து - உத்தாய் மாகாணத்திலிருந்து 38 மாணவா்கள், 6 ஆசிரியா்களுடன் பாங்காக் நகரை நோக்கி பாடசாலை சுற்றுலாவுக்கு வருகைத்தந்துள்ளனர்.
இதன்போது பேங்கொக்கின் வடக்கு புகா்ப் பகுதியிலுள்ள நெடுஞ்சாலையில் பேருந்தானது சென்றபோது அதன் டயா் வெடித்து அருகிலுள்ள தடுப்புச் சுவற்றில் மோதியுள்ளது.
இதில், அந்த பேருந்தில் எரிபொருளாகப் பயன்படுத்தப்பட்ட எரிவாயு வெடித்துச் சிதறி பேருந்து முழுவதும் தீ வேகமாகப் பரவியதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஈசல்கள் போல பாய்ந்து வந்த ஈரானின் ஹைபர்சோனிக் பலிஸ்டிக் ஏவுகணைகள்! திருப்பி அடிக்கத் தயராகும் இஸ்ரேல்!!
உயிருடன் மீட்பதற்கான முயற்சி
இந்நிலையில், பேருந்தில் இருந்து 16 மாணவா்கள் மற்றும் 3 ஆசிரியா்கள் மாத்திரம் வெளியேறியுள்ளனர்.
எஞ்சிய 22 மாணவா்கள், 3 ஆசிரியா்கள் தீவிபத்தில் பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது.
விபத்துப் பகுதிக்கு விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் தீயை அணைக்க முற்பட்ட போதிலும், உள்ளே சிக்கியிருந்த மாணவர்களை உயிருடன் மீட்பதற்கான முயற்சி பலனலிக்கவில்லை என அந்நாட்டு பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது.
இந்நிலையில் உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளம் காண அவர்களது குடும்பத்தார் பேங்கொக்கிற்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |