விசேட அதிரடிப்படையினரின் சுற்றிவளைப்பில் 17 வயதுடைய இளைஞர் கைது
தலைமன்னார் கிராம பகுதியில் வீடு ஒன்றில் இன்று விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
மன்னார் இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து தலை மன்னார் கிராம பகுதியில் உள்ள வீடு ஒன்றில் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போது குறித்த வீட்டில் இருந்து 220 கிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
இதன்போது 17 வயதுடைய இளைஞர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப்பொருள் மற்றும் கைது செய்யப்பட்ட இளைஞன் தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
தலைமன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ரொனால்டோவுக்கு அதிர்ச்சி கொடுத்த டிஆர் காங்கோ: ஃபிபா உலகக்கிண்ணத்தில் ரசிகர்கள் ஏமாற்றம் News Lankasri
இந்தியா மீது தாக்குதல் நடத்தப்பட்டால் துணையாக இருப்பேன்..ஆனால் மோடி இருந்தால்தான் - ட்ரம்ப் News Lankasri