யாழில் 17 வயது சிறுமி சடலமாக மீட்பு: மரண விசாரணை அதிகாரி மீது குற்றச்சாட்டு
யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பகுதியில், கடந்த சில வாரங்களுக்கு முன்னர், உயிரிழந்த சிறுமி ஒருவரின் மரணம் குறித்து திடீர் மரண விசாரணை அதிகாரி மீது உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
வட்டுக்கோட்டை முதலி கோவிலடியைச் சேர்ந்த கேதீஸ்வரன் தர்மிகா என்ற 17 வயதான சிறுமி, கல்வியங்காட்டில் வீட்டு பணிப்பெண்ணாக பணிபுரிந்து வந்த நிலையில் கடந்த 2023.07.23 அன்று தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீடகப்பட்டார்.
மரண விசாரணை
அவரது சடலம் மீதான மரண விசாரணை கடந்த மாதம் 24ஆம் திகதி நடைபெற்றது.
இதன் பின்னர் கடந்த மாதம் 25ஆம் திகதி குறித்த சிறுமியின் சடலம் எரியூட்டப்பட்டது.
இந்நிலையில் அவரது மரணத்தில் சந்தேகம் நிலவுவதாகவும், திடீர் மரண விசாரணை அதிகாரி சடலத்தை
எரிக்குமாறு கூறியதாகவும் உயிரிழந்த சிறுமியின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது குறித்து திடீர் மரண விசாரணை அதிகாரியை தொடர்புகொண்டு கேட்டபோது, சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையை வைத்தே நான் அவர்களுக்கு ஆலோசனை வழங்கினேன். சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையின்படி அது ஒரு தற்கொலை என கூறப்பட்டிருந்தது.
சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கை
அத்துடன் சிறுமியின் தாயார் தனது பிள்ளையின் மரணத்தில் சந்தேகம் உள்ளது என கூறினார்.
ஆகையால் நான் சடலத்தை புதைக்குமாறு கூறினேன்.
இந்நிலையில்,
சிறுமியின் தாயார் சடலத்தை தமது சமய முறைப்படி எரிக்கவுள்ளதாக கூறினார். அது
உங்களது விருப்பம் என நான் கூறினேன். இதுதான் நடந்தது என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |